ஐபிஎல்லை தொடர்ந்து குஷிபடுத்த வரும் ஐஎஸ்எல் : நாளை முதல் கோலாகலத் தொடக்கம்..!!

19 November 2020, 7:44 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை தொடர்ந்து இந்திய ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக ஐஎஸ்எல் கால்பந்து தொடர் நாளை முதல் தொடங்குகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கோவாவில்‌ உள்ள ஃபட்ரோடாவில்‌ உள்ள ஜவாஹர்லால்‌ நேரு மைதானம்‌, பாம்போலிம்மில்‌ உள்ள ஜிஎம்சி தடகள மைதானம்‌, வாஸ்கோவில்‌ உள்ள திலக்‌ மைதானம்‌ ஆகிய 3 இடங்களில்‌ நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு 20 போட்டிகள் கூடுதலாக நடத்தப்படுகின்றன. ஏனெனில், எஸ்சி ஈஸ்ட் பெங்கால் உள்ளிட்ட அணிகளின் வருகையால் 11 அணிகள் இந்தத் தொடரில் விளையாட இருக்கின்றன. எஃப்சி கோவா, ஏடிகே மோகன்‌ பகான்‌, பெங்களூர்‌ எஃப்சி, ஜாம்ஷெட்பூர்‌ எஃப்சி, சென்னையின்‌ எஃப்சி,மும்பை சிட்டி எஃப்சி, ஒடிஸா எஃப்சி, நார்த்ஈஸ்ட்‌ யுனைடெட்‌ எஃப்சி, கேரளா பிளாஸ்டர்ஸ்‌, ஹைதராபாத்‌ எஃப்சி, எஸ்சி ஈஸ்ட்‌ பெங்கால்‌ ஆகிய அணிகளாகும்.

நாளை நடக்கும் முதல் போட்டியில் கொல்கத்தா – கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Views: - 19

0

0