முழுமையா குணமடையாத ஜடேஜா… இரண்டாவது டெஸ்டில் சந்தேகம்!

21 December 2020, 10:47 pm
Quick Share

மெல்போர்ன் டெஸ்டில் ரவிந்திர ஜடேஜா முழுமையாகக் குணமடைந்தால் மட்டுமே பங்கேற்பார் எனத் தெரிகிறது.

அடிலெய்டு டெஸ்ட்ல் இந்திய கிரிக்கெட் அணி படுதோல்வியடைந்த காரணத்தால், அடுத்த டெஸ்டில் பல்வேறு மாற்றங்களுடன் களமிறங்க திட்டமிட்டுள்ளது. அதில் ஒரு மாற்றமாக ஹனுமா விகாரிக்குப் பதிலாக ஆல் ரவுண்டர் ரவிந்திர ஜடேஜாவை அணியில் சேர்க்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் ரவிந்திர ஜடேஜா காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையவில்லை என்றும் அவர் முழுமையாகக் குணமடைந்தால் மட்டும் இரண்டாவது டெஸ்டில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக முதல் டி -20 போட்டியில் பங்கேற்றது போது காயமடைந்தார்.

தவிர தொடை எலும்புப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் ரவிந்திர ஜடேஜாவால் முதல் டெஸ்டில் பங்கேற்க முடியாமல் போனது. தற்போது ஜடேஜா நன்றாகக் குணமடைந்து வருவதாகவும், ஆனால் டிசம்பர் 26ஆம் தேதிக்குள் அவரால் 100 சதவீதம் குணமடைய முடியுமா என்பது உறுதியாகத் தெரியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 100 சதவீதம் குணமடைந்தால் விகாரிக்குப் பதில் ஜடேஜா உறுதியாக அணியில் சேர்க்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜடேஜா இதுவரை 49 டெஸ்டில் 1 சதம் 14 அரைசதங்கள் என மொத்தமாக 1869 ரன்கள் அடித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான முந்தைய தொடர்களில் ஜடேஜா அரைசதம் விளாசியுள்ளார்.

தனிமையில் ரோஹித் இந்திய கிரிக்கெட் அணி தடுமாறி வந்தாலும் சீனியர் துவக்க வீரர் ரோஹித் சர்மாவை அணியில் சேர்க்க முடியாத நிலையில் இந்திய அணி நிர்வாகம் உள்ளது. ரோஹித் சர்மா தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதனால் மூன்றாவது டெஸ்ட்டில் தான் இவரால் பங்கேற்க முடியும்.

Views: - 0

0

0