ஜோ ரூட் காலை பிடித்த கோலி… பாராட்டிய ஐசிசியை படு கலாய் கலாய்த்த ஸ்டுவர்ட் பிராட்!

6 February 2021, 10:28 pm
Quick Share

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து கேப்டன் விராட் கோலியைப் பாராட்டிய ஐசிசியை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் படுமோசமாகக் கலாய்த்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்கிறது. இதில் இங்கிலாந்து கேப்டன் இரட்டை சதமடித்துக் கைகொடுக்க, இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட்டிற்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டபோது அவரது காலை பிடித்துவிட்டார்.

விராட் கோலியின் இந்த செயலை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பாராட்டியதோடு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசியும் பதிவு ஒன்றை வெளியிட்டுப் பாராட்டியது. அந்த பதிவில் சிறந்த விளையாட்டு உணர்வுக்கு இது மிகப்பெரிய எடுத்துக்காட்டு என அதில் குறிப்பிட்டிருந்தது. இந்த பதிவைப் பார்த்த இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், அதற்குப் பதில் ஒன்றை அளித்துள்ளார். அதில், “நானும் வீரர்களுக்கு ட்ரிங்க்ஸ் கொடுக்க ஓடினேன். இதற்குச் சிறந்த விளையாட்டு உணர்வு விருது வழங்கப்படுமா” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளரான பிராட் தன் மனதில் பட்டதைத் தைரியமாக வெளிப்படுத்தும் நபர். இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் இவர் அணியில் சேர்க்கப்படவில்லை. மாறாக ஆர்ச்சர், ஆண்டர்சன் தேர்வு செய்யப்பட்டனர். இதனால் களத்தில் விளையாடி வரும் இங்கிலாந்து வீரர்களுக்கு இடையில் டிரிங்ஸ் வழங்கினார் ஸ்டுவர்ட் பிராட். இதனால் இந்த விரக்தியில் கூட இப்படி ஒரு பதிவை அவர் வெளியிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Views: - 0

0

0