நங்கூரம் பாய்ச்சிய நியூசி., பேட்மேன்கள் : திணறும் இந்திய பந்துவீச்சாளர்கள்… கவலையளிக்கும் கான்பூர் டெஸ்ட்..!!

Author: Babu Lakshmanan
26 November 2021, 5:36 pm
Quick Share

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி சிறப்பான தொடக்கத்தை அமைத்துள்ளது.

இதையடுத்து, இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நேற்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற கேப்டன் ரகானே, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. மயாங்க் அகர்வால் (13) ஏமாற்றம் அளித்தாலும், கில் (52), புஜாரா (26), ரகானே (35) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை குவித்தனர்.

இதைத் தொடர்ந்து, 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஷ் ஐயர், ஜடேஜா நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடிய ஜடேஜா (50) விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும், சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஷ் ஐயர், தனது அறிமுகப் போட்டியிலேயே முதல் சதத்தை பதிவு செய்தார். இறுதியில், அஸ்வின் (38) ஓரளவுக்கு ரன்களை குவிக்க, 345 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் சவுதி 5 விக்கெட்டுக்களையும், ஜேமிசன் 3 விக்கெட்டுக்களையும், அஜிஸ் படேல் 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து, நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்சை தொடங்கிய யங் மற்றும் லாதம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அவ்வப்போது பவுண்டர்களை விளாசிய ரன்களையும் உயர்த்தினர். எவ்வளவு போராடியும் அவர்களின் விக்கெட்டை இந்திய பந்து வீச்சாளர்களால் கைப்பற்ற முடியவில்லை.

இறுதியில், 2வது நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்துள்ளது. லாதம் (50), யங் (75) களத்தில் உள்ளனர்.

Views: - 964

0

0