இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இமாலய சிக்சர் விளாசிய போலார்டு!

17 April 2021, 9:46 pm
Quick Share

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் கெய்ரன் போலார்டு இந்தாண்டின் இமாலய சிக்சர் விளாசினார்.

இந்தியாவில் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. இதில் சென்னையில் நடக்கும் இன்றைய 9வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஹைதராபாத் அணியில் விராட் சிங், அபிஷேக் சர்மா, முஜீப் மற்றும் கலீல் அஹமது ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். மும்பை அணியில், மார்கோ ஜேன்சனுக்கு பதிலாக ஆடம் மில்னே அணியில் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு குயிண்டன் டி காக் (40) மற்றும் கேப்டன் ரோகித் சர்மா (32) ஆகியோர் கைகொடுக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 150 ரன்கள் அடித்தது. இதற்கிடையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் போலார்டு கடைசி நேரத்தில் போலார்டு ஓரளவு அதிரடி காட்டினார். இவர் 22 பந்தில் 3 சிக்சர்கள் மற்றும் 1 பவுண்டரி என 35* ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

https://twitter.com/rantworld101/status/1383439896577122309?s=20

இந்நிலையில் இந்த போட்டியில் போலார்டு அடித்த ஒரு சிக்சர் இந்தாண்டின் இமாலய சிக்சராக அமைந்தது. இவர் அடித்த சிக்சர் சுமார் 105 மீட்டர் தூரம் பறந்தது. இதற்கு முன்பாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் கிளம் மேக்ஸ்வெல் 100 மீட்டர் தூரம் அடித்த சிக்சராக இருந்தது. தற்போது போலார்டு 105 மீ தூரம் அடித்த சிக்சர் மெகா சிக்சரக அமைந்துள்ளது.

Views: - 63

0

0