கவாஸ்கர் கால சாதனையை உடைக்க கோலி, புஜாராவிற்கு காத்திருக்கும் ரொம்ப நல்ல சான்ஸ்!

1 February 2021, 7:05 pm
kohli - pujara - updatenews360
Quick Share

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களான விராட் கோலி மற்றும் புஜாராவிற்கு கவாஸ்கரின் சாதனையைத் தகர்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதலில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரில் கவாஸ்கரின் நீண்ட நாள் சாதனையைத் தகர்க்க இந்திய கிரிக்கெட் அணியின் புஜாரா மற்றும் விராட் கோலிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய கேப்டன் விராட் கோலி கடைசியாகக் கடந்த 2019 நவம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிராகக் கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார்.

அதேபோல மற்றொரு இந்திய வீரர் புஜாரா கடைசியாகக் கடந்த 2019 ஜனவரி மாதம் சிட்னியில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகச் சதம் விளாசி அசத்தினார். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கிரிக்கெட் போட்டியில் குறைந்த அளவே நடந்தது. இதனால் கடந்த ஆண்டு விராட் கோலி சதம் அடித்த சதம் அடிக்கவில்லை. புஜாராவும் கடந்த ஆண்டு சதம் எதுவும் பதிவு செய்யவில்லை. இந்நிலையில் கடந்த 2016ல் இங்கிலாந்து அணி இந்தியா வந்தபோது அந்த தொடரில் மொத்தம் 655 ரன்கள் விளாசி அசத்தினார் கோலி. அதேபோல புஜாரா தன்பங்கிற்கு 405 ரன்கள் அடித்தார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்த இரு வீரர்களுக்கும் தங்களின் பார்வையை மீட்டுக் கொண்டுவர நல்ல வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. மேலும் டெஸ்ட் தொடரில் முன்னாள் வீரரான கவாஸ்கரின் சாதனையைத் தகர்க்கவும் இவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கர் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவில் நடந்த டெஸ்டில் 22 போட்டிகளில் பங்கேற்று 1331 ரன்கள் எடுத்துள்ளார். இவரை தொடர்ந்து குண்டப்பா விஸ்வநாத் (1022 ரன்கள், 17 போட்டிகள்) சச்சின் டெண்டுல்கர் (960 ரன்கள், 15 போட்டிகள்), விஜய் மஞ்ச்ரேக்கர் (855 ரன்கள், 11 போட்டிகள்), ஜெசிமா (843 ரன்கள், 10 போட்டிகள்) ஆகியோர் இந்திய மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய பட்டியலில் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது விராட் கோலி (843 ரன்கள், 9 போட்டிகள்), புஜாரா (839 ரன்கள் 9 போட்டிகள்) என இவர்களுக்கு அடுத்த இடங்களின் உள்ளனர். இந்த இரு வீரர்களும் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சிறந்த ரன் குவிப்பில் ஈடுபடும் பட்சத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் நீண்டநாள் சாதனையைத் தகர்க்கச் சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதற்கு ஏற்ப ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் புஜாரா. இவர் களத்தில் அதிக நேரம் நின்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த எதிர்முனையில் இருந்த வீரர்கள் இந்திய அணியைச் சாதகமான நிலைக்கு எடுத்துச் செல்ல மிகவும் உதவியாக இருந்தது. இதேபோல கோலி முதல் ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற போது மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த இரு வீரர்களும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் சாதிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Views: - 0

0

0