ஆஸியை அடிச்சுத்தூக்க ஒரே நாள் இரவில் மாஸ்டர் பிளான் போட்டுக்கொடுத்த கிங் கோலி!

22 January 2021, 6:22 pm
kohli - test - updatenews360
Quick Share

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் தோல்விக்குப் பின் இந்திய கேப்டன் விராட் கோலி ரகானே மற்றும் பயிற்சியாளர் உடன் நடத்திய கூட்டம் பயன் அளித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது. அடுத்தடுத்த போட்டிகளுக்கான திட்டத்தையும் அந்த கோலி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் அடிலெய்டில் நடந்தது. பகலிரவு ஆட்டமாக நடந்த இந்த டெஸ்டில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்களுக்கு சுருண்டது. இந்த மோசமான தோல்விக்குப் பின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது முதல் குழந்தையின் வருகைக்காக நாடு திரும்ப வேண்டிய நிலை இருந்தது. இதற்கு முன்பாக இந்திய கேப்டன் கோலி நடு இரவில் அடுத்த போட்டியில் கேப்டனாக செயல்படவுள்ள ரகானே மற்றும் பயிற்சியாளர்களுடன் ஒரு கூட்டம் நடத்தியுள்ளார்.

இந்த கூட்டம் குறித்து தற்போது இந்திய அணியின் பீல்டிங் கோச் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். அஸ்வினின் யூடியூப் சேனலில் பேட்டியளித்த ஸ்ரீதர் கூறுகையில், “அப்போது நடு இரவு இருக்கும். சுமார் 12.30 மணி இருக்கும். விராட் கோலி எனக்கு மெசேஜ் அனுப்பினார். அந்த நேரத்தில், அவர் எதற்காக எனக்கு மெசேஜ் அனுப்பினார் என எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, நான் , விக்ரம் ராத்தோர் ஆகியோர் ஒன்றாக இருந்தோம் என அவரிடம் கூறினேன். இதைப் பார்த்த கோலி நானும் வந்து இணைந்து கொள்கிறேன் என்றார். அதற்கு நான் எந்த பிரச்சனையும் இல்லை உடனடியாக வந்து இணைந்து கொள்ளுங்கள் என்றேன். பின் கோலி வந்த பின் அனைவரும் கூட்டத்தைத் துவங்கி தோல்வி குறித்து ஆலோசனை செய்தோம்.

பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்த 36 ஐ ஒரு பேட்ச் போல அணிந்து கொள்ளுங்கள். இந்த 36 தான் இந்த அணியைச் சிறந்த அணியாக மாற்றும் எனத் தெரிவித்தார். அந்த கூட்டத்திற்குப் பின்பு அடுத்த நாள் காலையில் ரகானேவை கோலி அழைத்துப் பேசினார். இதற்கிடையில் இந்திய அணியில் அதிக இடது கை பேட்ஸ்மேன்களை இணைக்க வேண்டுமெனச் சாஸ்திரி ஆலோசனை கூறினார். வலதுகை பேட்ஸ்மேன் ஆக இருப்பதால் இந்த முடிவு எடுத்து உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார். தவிர இது ஆஸ்திரேலிய பவுலர்களுக்கும் சிறிது தடுமாற்றத்தை அளிக்கும். பவுலிங்கை சரியான லைனில் அவர்களால் வீச முடியாது என்றும் கூறினார். அதேநேரம் ஐந்து பவுலர்கள் என்ற ஆலோசனையும் வழங்கினார் என்றார்.

இதற்கிடையில் அந்த இரவு கோலி பயிற்சியாளர்களுடன் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் எப்படிச் செயல்பட வேண்டும் என்றும் எந்த வீரரை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெளிவாகத் திட்டமிட்டு ரகானேவிடம் அதிகாலையில் தெரிவித்திருந்தார். இதுவே இந்திய அணியின் அடுத்தடுத்த எழுச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.

Views: - 0

0

0