‘சபாஷ் கொல்கத்தா’ : சிறப்பான பந்துவீச்சால் ராஜஸ்தானை எளிதில் வீழ்த்தியது!!

30 September 2020, 11:39 pm
Quick Share

ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை எளிதில் வீழ்த்தி 2வது வெற்றியை கொல்கத்தா அணி பதிவு செய்தது.

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு கில் (47) மற்றும் மோர்கன் (34 நாட் அவுட்) ஆகியோரின் பங்களிப்பினால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்தது.

இதைத்தொடர்ந்து, விளையாடிய ராஜஸ்தான் அணி வீரர்கள் கொல்கத்தா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால், ரன் குவிக்க தவறிய பேட்ஸ்மேன்கள், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். 3 முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்கு ரன்களில் வெளியேறினர். இதனால், 50 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர், வந்த வீரர்களும் தாக்குபிடிக்காததால், அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், கொல்கத்தா அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.