மும்பை அணிக்கு தண்ணிக் காட்டிய கொல்கத்தா…! 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…!!!

Author: Udhayakumar Raman
23 September 2021, 11:32 pm
Quick Share

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் இன்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சை அணியுடன் பலப்பரீட்சை மேற்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் சுப்மன் கில் 13 (9) ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து வெங்கடேஷ் ஐயருடன், ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தார். அதிரடியில் மிரட்டிய இந்த ஜோடி, மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் மும்பை அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினர்.

பின்னர் இந்த ஜோடியில் வெங்கடேஷ் ஐயர் 30 பந்துகளில் 53 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியில் கலக்கிக் கொண்டிருந்த திரிபாதி தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். அடுத்தாக களமிறங்கிய கேப்டன் மோர்கனுடன், ஜோடி சேர்ந்த திரிபாதி தொடர்ந்து அதிரடி காட்டி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். வெற்றிபெற 9 ரன்கள் தேவைப்பட்டநிலையில் மோர்கன் 7 (8) ரன்களில் வெளியேறினார்.
இறுதியில் ராகுல் திரிபாதி 74 (42) ரன்களும், நிதிஷ் ராணா 5(2) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் கொல்கத்தா அணி 15.1 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

Views: - 343

0

0