இளம் வீரர் ‘கில்’லின் கில்லியான ஆட்டத்தால் முதல் வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா..!

27 September 2020, 12:32 am
Quick Share

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் வார்னர் (36), மணீஷ் பாண்டே (51), சஹா (30) ரன்கள் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கொல்கத்தா அணி தரப்பில் கம்மின்ஸ், சக்கரவர்த்தி, ரஸல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

இதைதொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணிக்கு தொடக்க வீரர் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நரேன், கேப்டன் தினேஷ் கார்த்திக் ஏமாற்றம் அளித்தாலும், கில்லுடன் ராணா, மோர்கன் ஆகியோர் இணைந்து அணியை வெற்றிப் பாதையில் அழைத்து சென்றனர். ராணா 26 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், கில் (70), மோர்கன் (42) ஆகியோர் கடைசி வரை ஆட்டமிழக்காமல், 18 ஓவர்களில் அணியை வெற்றி பெறச் செய்தனர். இதன்மூலம், கொல்கத்தா அணி இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

Views: - 7

0

0