பதினோரு ஆண்டுகளுக்குப்பின் பாகிஸ்தான் மண்ணில் விளையாடும் குமார சங்ககாரா…!

14 February 2020, 12:43 pm
Quick Share

2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாடி வந்தது. அப்போது லாஹோர் நகரத்திலுள்ள கட்டாபி மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க பஸ்ஸில் இலங்கை அணி பயணம் செய்துக்கொண்டிருந்த பொழுது அந்நாட்டு தீவிரவாத கும்பலான தாலிபான் மற்றும் லஸ்கர் ஐ ஜஹாங்கிவி தாக்குதல் நடத்தினர்.


இதில் எட்டு அப்பாவி மக்கள் உயிரிழந்துப்போக, ஏழு இலங்கை வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தின்போது குமார சங்கக்காரா இடம்பெற்றிருந்தார். இந்த தாக்குதலிற்குப்பிறகு கடந்த ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் இலங்கை விளையாடியது. அதனைத் தொடர்ந்து வங்க தேச அணி விளையாடியது. தற்போது MCC யின் தலைவரான குமார சங்ககாரா தலைமையில் ஒரு இருபது ஓவர் போட்டி அந்நாட்டு லாஹோர் அணியுடன் விளையாடயுள்ளது.


இதைப்பற்றி அவருடன் கேட்கையில் ” நான் பழசை நினைத்து வருந்துபவனல்ல. எது நடந்தாலும் அதில் நாம் வாழ்க்கைக்கு கற்றுக்கொள்ளவேண்டிய விஷயம் இருக்கும். அந்த வகையில் லாஹோர் தாக்குதல் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுத் தந்தது. நான் பாகிஸ்தான் மண்ணில் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.