பொளந்து கட்டிய ஸ்டொய்னிஸ், மாயங்க் அகர்வால்..! பரபரப்பான போட்டி…சூப்பர் ஓவரில் டெல்லியின் சாம்ராஜ்யம்..!

21 September 2020, 9:52 am
Quick Share

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 2வது போட்டியில் டெல்லி – பஞ்சாப் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்க வீரர்கள் ஏமாற்றம் அளித்தாலும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், பண்ட் ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தனர். இருப்பினும், பஞ்சாப் அணியின் நேர்த்தியான பந்துவீச்சால், டெல்லியின் ஸ்கோர் 120ஐ எட்டுமா..? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், இறுதியில் ஸ்டொய்னிஸ் அதிரடி காட்ட, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்தது. ஸ்டொய்னிஸ் 21 பந்துகளில் 53 ரன்கள் விளாசினார்.

இதைத்தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க வீரர் மாயங்க் அகர்வால் மட்டும் அணியின் வெற்றிக்காக போராடினார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட போது, சிக்ஸ் மற்றும் பவுண்டரியுடன் 12 ரன்களை விளாசி மாயங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து, 3 பந்துகளில் ஒரு ரன் தேவைபட்ட போது, கடைசி ஓவரை வீசிய ஸ்டொய்னிஸ் இரு பந்துகளில் விக்கெட்டை எடுத்து ஆட்டத்தை சமன் செய்தார்.

பின்னர், நடைபெற்ற சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

Views: - 7

0

0