ஐ.பி.எல்.லை தொடர்ந்து லங்கா பிரிமீயர் லீக் தொடர் : கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்..!

3 September 2020, 8:19 pm
lanka cricket - updatenews360
Quick Share

கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஒத்திவைக்கப்பட்ட லங்கா பிரிமீயர் லீக்கின் புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போலவே, இலங்கையிலும் லங்கா பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவலால் ஆக.,28ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், வெளிநாட்டு வீரர்களை 14 நாட்களுக்கு மேல் தனிமைப்படுத்த வேண்டியிருப்பதால், இந்தத் தொடர் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், நவம்பர் மாதம் 14-ந்தேதி முதல் டிசம்பர் 6-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 23 போட்டிகள் நடத்தப்படுகின்றன. கொழும்பு, கண்டி, காலோ, தம்புல்லா, ஜாஃப்னா ஆகிய ஐந்து நகரங்களை மையமாக கொண்டு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

Views: - 0

0

0