மும்பை அணியின் பயிற்சியாளராக அமோல் முசும்தார் தேர்வு.. பொறுப்பேற்றவுடனே முதல் சபதமா..!!

2 June 2021, 11:34 am
Quick Share

விஜய் ஹசாரே போட்டியின் சாம்பியனான மும்பை அணியின் பயிற்சியாளராக ரமேஷ் பவார் செயல்பட்டு வந்தார். இதையடுத்து, அவர் மீண்டும் இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, காலியான மும்பை அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்தது. அதன்படி, முன்னாள் வீரர்கள் வாசிம் ஜாஃபர், சைராஜ் பஹுதுலே, அமோல் முசும்தார் உள்ளிட்ட பலரும் விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில், மும்பை அணியின் பயிற்சியாளராக அமோல் முசும்தார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியின் பேட்டிங் ஆலோகராக 3 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார்.

41 முறை ரஞ்சி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ள மும்பை அணி, கடந்த 2016க்கு பிறகு ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இந்த முறை ரஞ்சி கோப்பையை மும்பை அணி வெல்வதே எனது முதல் இலக்கு என்று அமோல் முசும்தார் தெரிவித்துள்ளார்.

Views: - 446

0

0