புது வீரர்களுக்கு ஜெர்சிகளை வழங்கிய ‘தல’ தோனி!

7 April 2021, 10:53 pm
Quick Share

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள புது வீரர்களுக்கு சென்னை அணியின் கேப்டன் தோனி ஜெர்சிகளை வழங்கினார்.

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் துவங்குகிறது. இந்நிலையில் இதில் பங்கேற்கும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள புது வீரர்களான செத்தேஸ்வர் புஜாரா உள்ளிட்டோருக்கு தோனி சிஎஸ்கேவின் ஜெர்சிகளை வழங்கினார்.

இதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தங்களின் டிவிட்டர் பதிவில் இதை பகிர்ந்துள்ளது. தோனியிடம் இருந்து ஜெர்சியைப் பெற்ற புஜாரா வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை குடும்பத்தார் மற்றும் தோனியிடம் இருந்து அதிகாரப்பூர்வ கிட்டைப்பெற்றதில் மகிழ்ச்சி. இந்தாண்டு சிறந்த ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கிறேன்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கடந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 7வது இடம் பிடித்து வெளியேறியது. இந்நிலையில் இந்தாண்டு இந்திய மண்ணில் இந்த தொடர் நடக்கயிருப்பதால் ரசிகர்கள் பெரிய அளவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீது அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். மேலும் ஷேன் வாட்சனின் ஓய்வு, ஹர்பஜன் சிங் அணி மாற்றம் என பல மாற்றங்களுடன் அந்த அணி களமிறங்கவுள்ளது. தவிர, மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியுள்ள சுரேஷ் ரெய்னா என பேட்டிங் வரிசையை அந்த அணி பலப்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த வீரர்கள் மினி ஏலத்தில் சென்னை அணி நிர்வாக ரூ. 9.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்த கிருஷ்ணப்பா கௌதம், சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் விட்டுச்சென்ற இடத்தை பூர்த்தி செய்வார் என ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். புஜாராவையும் சென்னை அணி நிர்வாகம் மினி ஏலத்தில் ரூ. 50 லட்சத்திற்கு எடுத்தது. புஜாரா கடந்த 2014ம் ஆண்டுக்கு பின் முதல் முறையாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளார். சிஎஸ்கே அணி வரும் 10 ம் தேதி தங்களின் முதல் போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது.

Views: - 0

0

0

Leave a Reply