லார்ட்ஸ் டெஸ்ட் : இங்., பவுலர்களுக்கு தண்ணி காட்டிய சமி – பும்ரா : வீரர்களுடன் சண்டை செய்த ஆண்டர்சன்..!!

Author: Babu Lakshmanan
16 August 2021, 6:02 pm
bumrah - sami - - updatenews360
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது இன்னிங்சில் இந்திய அணியின் ஷமி மற்றும் பும்ரா அபாரமாக ஆடி வருகின்றனர்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் லார்ட்சில் கடந்த 12ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 364 ரன்களும், இங்கிலாந்து அணி 391 ரன்களையும் சேர்த்தது. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு முன்கள வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்தனர்.

கேஎல் ராகுல், ரோகித் ஷர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை. புஜாரா (45) ரகானே (61) மட்டும் ஓரளவுக்கு ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தனர். 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 181 ரன்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

வெறும் 154 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், கடைசி நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்தது. பண்ட் 22 ரன்னுடனும், இஷாந்த் ஷர்மா 16 ரன்னுடன் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால், இந்திய அணி 200 ரன்களை கூட இங்கிலாந்துக்கு இலக்காக நிர்ணயிக்குமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷமி – பும்ரா ஆகியோர் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். தேவைப்படும் போது ரன்களையும், தேவையில்லாத போது நிதானத்தையும் கையாண்டனர். இதனால், இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் இருவரின் விக்கெட்டை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. இதனால், அந்த அணியின் ஆண்டர்சன் பும்ரா மற்றும் ஷமியிடம் வார்த்தை போரில் ஈடுபட்டார். அபாரமாக ஆடிய ஷமி 57 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

தற்போது மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்களை எடுத்துள்ளது. இருவரும் 9 விக்கெட்டுக்கு 77 ரன்களை சேர்த்துள்ளனர். இது இங்கிலாந்துக்கு எதிரான 9 விக்கெட்டின் அதிகபட்ச ரன்களாகும். ஷமி 52 ரன்களுடனும், பும்ரா 30 ரன்களுடன் களத்தில் உள்னர்.

Views: - 577

1

0