தொடக்க வீரருக்கு ஆள் இல்லாமல் தவிக்கும் இந்தியா… முதல் போட்டியில் இருந்து மயாங்க் அகர்வால் விலகல்

Author: Babu Lakshmanan
3 August 2021, 10:56 am
mayank agarwal - updatenews360
Quick Share

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக மயாங்க் அகர்வால் விலகியுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்த நிலையில், இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்திலிருந்து தொடக்க ஆட்டக்காரர் மயாங்க் அகர்வால் விலகியுள்ளார்.

வலைபயிற்சியின் போது பந்து அவரது ஹெல்மெட்டில் பட்டு ஏற்பட்ட காயத்தினால் அவர் விலகினார். ஏற்கனவே தொடக்க வீரர் கில் இங்கிலாந்து தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய நிலையில், தற்போது மயாங்க் அகர்வாலுக்கு ஏற்பட்டுள்ள காயம் அணியில் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கேஎல் ராகுல் சரியான ஃபார்மில் இல்லாத நிலையில், ரோகித் சர்மாவுடன் இணைந்து விளையாட இருக்கும் மற்றொரு தொடக்க வீரர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Views: - 388

0

0