விடாமல் துரத்தும் மாயங்க் அகர்வாலின் மட்டமான அரைசத ராசி… என்ன கொடுமை இது!

2 May 2021, 11:10 pm
Quick Share

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் 99 ரன்கள் அடித்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மாயங்க் அகர்வாலின் மோசமான ராசி இன்றும் தொடர்ந்தது.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டெல்லி அணியை எதிர்கொண்டது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ராகுல் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் மாயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இதில் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் நிகோலஸ் பூரானிக்கு பதிலாக இங்கிலாந்தின் தாவித் மலான் அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றார். அதேபோல மாயங்க் அகர்வாலும் அணிக்கு திரும்பினார். டெல்லி அணியில் எந்த மாற்றமும் இல்லை.


இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ராகுல் இல்லாத நிலையில் கேப்டன் பொறுப்பை ஏற்ற, மாயங்க் அகர்வால் 58 பந்தில் 8 பவுண்டரி 4 சிக்சர் என மொத்தமாக 99 ரன்கள் அடித்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார். மேலும் ஐபிஎல் அரங்கில் தனது 9வது அரைசதத்தை பதிவு செய்தார் மாயங்க். இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 166 ரன்கள் அடித்தது. எட்டக்கூடிய இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஷிகர் தவான் (69*) அரைசதம் அடித்து கைகொடுக்க, டெல்லி கேபிடல்ஸ் அணி 17.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 167 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மூன்றாவது வீரர்
ஐபிஎல் அரங்கில் 99 ரன்கள் அடித்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்த மூன்றாவது வீரரானார் மாயங்க் அகர்வால். முன்னதாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக கடந்த 2013 இல் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னா 52 பந்தில் 99 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக கடந்த 2019 இல் நடந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில் 64 பந்தில் 99 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இவர்களைத் தொடர்ந்து தற்போது இன்றைய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக மாயங்க் அகர்வால் 99 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த மூன்றாவது வீரரானார்.

மட்டமான ராசி
இதற்கிடையில் பஞ்சாப் அணிக்காக இந்த போட்டியில் மாயங்க் அகர்வால் தனது ஏழாவது அரைசதத்தை பதிவு செய்தார். இதில் 5 முறை பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்திருந்தது. இந்த மோசமான ராசி இன்றும் பஞ்சாப் அணிக்கு தொடர்ந்தது. மாயங்க் அரைசதம் அடித்த போட்டியில் பஞ்சாப் அணி 6வது தோல்வியை சந்தித்தது.

Views: - 122

0

0

Leave a Reply