Olympic Update : இந்தியாவுக்கு முதல் பதக்கம்… பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் வெள்ளி வென்று சாதனை..!!

By: Babu
24 July 2021, 12:12 pm
meera bai saanu updatenews360
Quick Share

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்குதல் வீராங்க மீராபாய் சானு இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 205 நாடுகள் மற்றும் அகதிகள் அணி ஆகியவற்றை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவிற்கு ஒரு பதக்கத்தை உறுதி செய்தார் மீராபாய் சானு. மகளிர் 49 கிலோ எடை பிரிவில் பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார். இந்தப் பிரிவில் சீனா தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.

Views: - 303

3

0