கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு மாபெரும் நிதியுதவி : மாஸ் காட்டிய மெஸ்சி!!

13 May 2020, 12:14 pm
Messi - updatenews360
Quick Share

கொரோனா தடுப்பு சிகிச்சைக்காக அர்ஜெண்டினா நாட்டின் மருத்துவமனைகளுக்கு கால்பந்து வீரர் மெஸ்சி ரூ.5 கோடியை வழங்கியுள்ளார்.

அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேப்டனாகவும், தலைசிறந்த பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருபவர் மெஸ்சி. தற்போது, கொரோனாவால் உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், அவர் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றார்.

தென் அமெரிக்கா நாடான அர்ஜெண்டினாவில் தற்போது கொரோனா தாக்கம் காணப்படுகிறது. கொரோனாவுக்கு எதிராக அந்த நாட்டு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் இரவு பகலாக கொரோனா தடுப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அங்குள்ள மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் வாங்குவதற்காக மெஸ்சி 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும், பார்சிலோனா அணியின் ஊதியத்தில் 70 சதவீதத்தை விட்டுக் கொடுக்க தயார் என்றும், கிளப்பில் உள்ள ஊழியர்களுக்க 100 சதவீதம் ஊதியம் பெறுவதற்கு உறுதியளிப்போம் எனக் கூறியிருந்தார்.

Leave a Reply