மெஸ்சிக்கு 753 போட்டிகளுக்குப் பின் முதல் ரெட் கார்டு: இரு போட்டிகளில் பங்கேற்கத் தடை!

19 January 2021, 9:06 pm
Quick Share

எதிரணி வீரரைத் தாக்கிய காரணத்திற்காக பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்சி 2 போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்லெடிக்கோ பில்பாவ் அணிக்கு எதிரான போட்டியின் போது அந்த அணியின் வீரர் மெஸ்சி தாக்கியதால், அவர் 12 போட்டி வரை பங்கேற்கத் தடை விதிக்கும் எனத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நட்சத்திர வீரரான மெஸ்சிக்கு குறைந்தபட்ச தண்டனையாக வெறும் 2 போட்டிகளில் பங்கேற்கக் கால்பந்து கூட்டமைப்பின் கமிட்டி குறைந்தபட்ச தண்டனை அளித்துள்ளது.

இந்த போட்டியின் போது பந்தை பாஸ் செய்த பிறகு எதிரணியின் வீரரான ஏசியருக்கு எதிராகத் தனது வலது கையை கொண்டு தாக்கினார். இதையடுத்து உடனடியாக ஏசியர் மைதானத்தில் விழுந்தார். இதை வீடியோ ஆதாரம் மூலம் ஆய்வு செய்த கூட்டமைப்பு 753 போட்டிகளுக்குப் பின் பார்சிலோனா அணிக்காகப் பங்கேற்ற பின் முதல் முறையாக மெஸ்சிக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. தற்போது இந்த குற்றத்துக்காக இரண்டு போட்டிகளில் பங்கேற்கவும் மெஸ்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப் போட்டியில் நடுவராக இருந்த கில் மாஞ்சானோ மெஸ்ஸி எதிரணி வீரரை அதிக பலத்துடன் தாக்கியதாக உறுதி செய்தார். ஆனால் அப்போது பந்து மெஸ்சியின் அருகில் இல்லை என்றும் நடுவர் உறுதி செய்தார். இதையடுத்து மெஸ்சியால் எல்சி அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது. சமீபத்தில் பார்சிலோனா அணிக்காகப் பங்கேற்று பீலேவின் சாதனையைத் தகர்த்து அசத்தினார் மெஸ்சி. மேலும் பார்சிலோனா அணியை விட்டு விரைவில் மெஸ்சி வெளியேறுவார் என்றும் தெரிகிறது. இதற்கிடையில் தற்போது மெஸ்சிக்கு புது சிக்கலாக இரு போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Views: - 3

0

0