எல்லாம் மகள் பிறந்த அதிர்ஷ்டம்… எங்கேயோ எகிறிய கோலியின் மவுசு!

13 January 2021, 9:08 pm
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் விளம்பரங்களின் ராஜா விராட் கோலி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கடந்த 11ம் தேதி விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான விஷயத்தைக் கோலி தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து கோலி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “இன்று மதியம் எங்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களின் அன்பு மற்றும் பிரார்த்தனை மற்றும் ஆசிகளுக்கு எங்களின் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அனுஷ்காவும் குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளனர். வாழ்க்கையின் புதிய அத்தியாயம் துவங்கியுள்ளது. இந்த தருணத்தில் எங்களின் தனிமையைப் புரிந்து கொண்டதற்கு நன்றி” என அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில் கோலிக்குப் பெண் குழந்தை பிறந்த நேரம் அவரின் பிராண்ட் வேல்யூ எனப்படும் மதிப்பு எங்கோ எகிறியுள்ளது. இது விராட் கோலி அனுஷ்காவுடன் சேர்ந்து ஜோடியாக ஒப்பந்தம் செய்யப் பல விளம்பர நிறுவனங்கள் முன்வந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் விராட் கோலி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக உள்ள தகவலைத் தெரிவித்தார். இதற்குப் பின் குழந்தை பராமரிப்பு பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் தற்போது கோலி மற்றும் அனுஷ்கா விளம்பரத்தில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிகிறது.

மேலும் ஒரு தனியார் நிறுவனத்தின் ஆய்வின்படி விராட் கோலியின் பிராண்ட் வேல்யூ தான் இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதிக மதிப்பு கொண்டதாக உள்ளது. இவரின் ஒட்டுமொத்த பிராண்ட் வேல்யூ மதிப்பு சுமார் 325 கோடிகள் ஆகும். கோலியை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 167 கோடிகள் மூலம் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர்களைத் தொடர்ந்து முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி 124 கோடிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Views: - 9

0

0