செம்ம சீன் இருக்கு… பயிற்சியிலேயே இப்பிடின்னா… டெல்லி ரசிகர்களை கதிகலங்க வைத்த தல தோனி!!

10 April 2021, 3:22 pm
Quick Share

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பயிற்சியின் போது சென்னை கேப்டன் தோனி சிக்சர்கள் விளாசிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கடந்தாண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடருடன் தோனி ஓய்வு பெறவுள்ளதாக தகவல்கள் வேகமாக பரவியது. இதுகுறித்து தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, நிச்சயமாக இல்லை என பதில் அளித்தார். இந்நிலையில் சுமார் 4 மாத இடைவேளைக்கு பின் தற்போது நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனி மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துகிறார். இந்நிலையில் இன்று நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2வது லீக் போட்டியில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இளம் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் இன்று இந்த போட்டிக்கான பயிற்சியின் போது தோனி சிக்சர்களாக பறக்கவிட்ட வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாக தங்களின் டிவிட்டர் பக்கத்தில் “உள்ள வந்தா பவர் அடி” என அதில் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளது. இதற்கிடையில் இந்த வீடியோவைப் பார்த்த தோனி ரசிகர்கள் இன்று டெல்லி அணிக்கு எதிராக சிறப்பான தரமான சம்பவம் காத்திருப்பதாக கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

குரு – சிஷ்யன்
இன்றைய போட்டி குரு மற்றும் சிஷ்யனுக்கு இடையே நடக்கும் மோதலாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் தோனியின் மாற்று வீரராக சர்வதேச கிரிக்கெட் அணியில் இளம் ரிஷப் பண்ட் இடம் பிடித்தார். தோனியிடம் இருந்து பல ஆட்ட நுணுக்கங்களை கற்றுக்கொண்ட பண்ட் இடையில் கொஞ்சம் சறுக்கலை சந்தித்தார். ஆனால் கடந்த 4-5 மாதங்களாக ரிஷப் பண்ட் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் தொடரில் மிரட்டிய பண்ட் முதல் முறையாக டெல்லி அணியை வழிநடத்துகிறார்.

Views: - 17

0

0