தெறி மாஸ் காட்டிய ராயுடு.. மொயின், டுபிளசி அபாரம்: மும்பைக்கு இமாலய இலக்கு!

1 May 2021, 9:24 pm
Quick Share

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 218 ரன்கள் எடுத்தது.

இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. இதில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எதிரிகளாக பார்க்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இன்றைய லீக் போட்டியில் எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

மும்பை அணியில் நாதன் கூல்டர் நைலுக்கு பதிலாக ஜேம்ஸ் நீசம் இடம் பிடித்தார். ஜெயந்த் யாதவிற்கு பதில் தவால் குல்கர்னி அணியில் சேர்க்கப்பட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்கியது.

ருதுராஜ் ஏமாற்றம்
இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துவக்க வீரர் ருதுராஜ் ஜெய்க்வட் வெறும் 4 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின் இணைந்த டூபிளசி மற்றும் மொயின் அலி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டார். சீரான இடைவெளியில் பவுண்டரிகளும் சிக்சர்களுமாக இருவரும் மாறி மாறி விளாசினார்.

சூப்பர் ஜோடி
இதையடுத்து சென்னை அணியின் ரன் வேகம் வேகமாக அதிகரித்தது. இதற்கிடையில் நீசம் வேகத்தில் ஒரு சிக்சர், 2 பவுண்டரிகள் அடித்து அசத்திய மொயின் அலி அரைசதம் கடந்தார். மறுமுனையில் டூபிளசி தன் பங்கிற்கு பும்ரா வேகத்தில் 2 இமாலய சிக்சர்கள், ஒரு பவுண்டரி அடித்து அரைசதம் கடந்து மிரட்டினார். ஆனால் மொயின் அலி (58) அதே ஒவரில் அவுட்டானார். அடுத்த ஒவரிலேயே டூபிளசியும் (50) பெவிலியன் திரும்ப,சுரேஷ் ரெய்னா (2) வந்த வேகத்தில் நடையைக் கட்டினார்.

ராயுடு அதிரடி
பின் இணைந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் அம்பத்தி ராயுடு ஜோடி துவக்கம் முதலே அதிரடியாக ரன்கள் சேர்க்க துவங்கியது. தவால் குல்கர்னி வீசிய ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை அடித்து மிரட்டினார் ராயுடு. மறுமுனையில் தன் பங்கிற்கு பும்ரா வேகத்தில் இரண்டு பவுண்டரிகள் விளாசினார் ரவிந்திர ஜடேஜா. தொடர்ந்து போட்டியின் 18-வது ஓவரை பவுல்ட் வீச அந்த ஓவரில் ஒரு 2 சிக்சர்கள் உட்பட மொத்தமாக 20 ரன்கள் சேர்த்தார் ராயுடு.

இதன் மூலம் இந்த போட்டியி 20 பந்தில் அரைசதம் கடந்தார் ராயுடு. இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக குறைந்த பந்தில் அரைசதம் கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமை பெற்றார் ராயுடு. முன்னதாக சுரேஷ் ரெய்னா 16 பந்துகளிலும், கேப்டன் தோனி 20 பந்துகளிலும் அரைசதம் கடந்துள்ளனர். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 218 ரன்கள் குவித்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி அணிக்கு 219 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. மும்பை அணிக்கு அதிகபட்சமாக போலார்டு 2 விக்கெட் வீழ்த்தினார்.

Views: - 119

0

0

Leave a Reply