சென்னை வந்தடைந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்!

31 March 2021, 8:48 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் சென்னை வந்தடைந்துள்ளனர்.

இந்தியாவில் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி துவங்குகிறது. இதன் முதல் போட்டியில் தற்போதைய சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைச் சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடக்கவுள்ள முதல் போட்டியில் எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்க மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, உள்ளிட்ட மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.

இதை மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது. இதற்கிடையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறையும் பலமான கூட்டணியுடன் களம் இறங்குகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஐபிஎல் கிரிக்கெட் அணியின் வரலாற்றிலேயே ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரே அணி என்ற பெருமையும் மும்பை அணி வசமே உள்ளது.

மேலும் இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அசைக்க முடியாத பலம் வாய்ந்த அணியாகவும் அதிக மதிப்பு கொண்ட அணியாகவும் மும்பை இந்தியன்ஸ் அணியைத் திகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பைனலில் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த சில ஆண்டுகளாகவே மும்பை இந்தியன்ஸ் அணியை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் அசுரபலம் கொண்ட அணியாக காட்சியளிக்கிறது. மேலும் தொடர் வெற்றிகளைக் குவித்து மற்ற அணிகளுக்கு கடும் சவால் கொடுத்து வருகிறது.

இதற்கு காரணம் அந்த அணி முக்கியமான வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா போன்ற வீரர்களை மட்டுமே நம்பி இல்லாமல், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, குர்னால் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் கெய்ரான் போலார்டு என பல்வேறு சிறப்பான வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளது இந்த தொடர் வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் அதே நேரம் மற்ற அணிகளை போலல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி வெறும் வெளிநாடுகளை மட்டுமே நம்பி இல்லாமல் அந்த அணியில் கீழ் பல திறமையான இந்திய வீரர்களையும் உருவாக்கியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் அரங்கில் மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019, மற்றும் 2020 என ஐந்து முறை ரோகித் சர்மா தலைமையில் கோப்பை வென்று அசத்தியுள்ளது. இது இந்த அணிக்கு இந்த முறையும் கூடுதல் உற்சாகம் அளிக்கும் என்று அந்த அணி நிர்வாகம் நம்புகிறது.

Views: - 81

2

0