பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா சரவெடி: பஞ்சாப்பை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது மும்பை!!

Author: Udayaraman
1 October 2020, 11:51 pm
Quick Share

ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு முன்னணி வீரர்கள் ஏமாற்றம் அளித்தாலும் கேப்டன் ரோகித் சர்மா (70) அரைசதம் அடித்து அணியின் ரன் குவிப்பிற்கு கை கொடுத்தார். இறுதியில் வந்த பொல்லார்டு (47), ஹர்திக் பாண்டியா (30) ஆகியோர் அபாரமாக, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்தது.

இமாலய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு பூரானை (44) தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால், அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 48 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி பெற்றுள்ள மும்பை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

Views: - 58

0

0