ஐபிஎல் கிரிக்கெட் : 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை அணி!!

11 November 2020, 12:00 am
Quick Share

13-வது ஐபிஎல் சீசனின் இறுதி ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஐ.பி.எல் 2020 இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரோயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக மார்கஸ் ஸ்டோனிஷ், ஷிகார் தவான் களமிறங்கினார்கள். ஹைதராபாத் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் சிறப்பான தொக்கத்தை கொடுத்த இந்த ஜோடி இன்றையப் போட்டியில் ஜொலிக்க தவறிவிட்டனர்.

மார்க்ஸ் ஸ்டோனிஸ் ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் பந்துவீச்சில் அவுட்டாக அடுத்துவந்த ராஹனேவும் 2 ரன்னில் போல்ட் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். அணிக்கு நம்பிக்கையாக இருந்த தவானும் 15 பந்துகளில் ஜெயந்த் ஜாதவ் சுழலில் சிக்கினார். டெல்லி அணி 22 ரன்களுக்கு 3 விக்கெட்களை பறிகொடுத்து தடுமாறியது.

கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் – ரிஷப் பந்த் ஜோடி பொறுப்புணர்ந்து நிதானமாக விளையாடினர். இவர்களின் சிறப்பான பார்ட்னர்ஷிப்பால் தடுமாற்றத்திலிருந்து மீண்டது. ரிஷப் பந்து 38 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் விளாசி அவுட்டானார். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கியது.

மும்பை அணியின் வீரர்கள் தொடக்க ஆட்டகாரரான குயிண்டன் டி காக் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சூர்ய குமார் யாதவ் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இதையடுத்து நிதானமாக விளையாடிய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக மும்பை அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 முறையாக கோப்பையையும் வென்றது.

Views: - 40

0

0