சூர்யகுமாரின் அதிரடியால் பெங்களூரூ அணியை வீழ்த்தியது மும்பை : 10வது முறையாக பிளே ஆஃப்பிற்கு முன்னேறி அபாரம்..!!

28 October 2020, 11:20 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரூவிற்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி, பிளே ஆப்ஃப்பிற்கு தகுதி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய பெங்களூரூ அணிக்கு, தொடக்க வீரர்கள் படிக்கல் – பிலிப்ஸ் ஆகியோர் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். 8 ஓவர்களுக்கு 71 ரன்கள் குவித்த நிலையில், 33 ரன்களை சேர்த்த பிலிப் ஆட்டமிழந்தார்.

இதைத்தொடர்ந்து வந்த கேப்டன் கோலி, டிவில்லியர்ஸ் உள்பட மற்ற வீரர்கள் யாரும் சோபிக்காத நிலையில், படிக்கல் மட்டும் அதிரடி காட்டினார். அவர் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, பெங்களூரூ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது. மும்பை அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும், போல்ட், ராகுல் சஹார், பொல்லார்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்க வீரர்கள் ஓரளவுக்கு பங்களிப்பை கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டினார். அவர் 43 பந்துகளில் 79 ரன்களை குவித்து, கடைசி ஓவரில் அணியை வெற்றி பெறச் செய்தார். இதன்மூலம், 8வது வெற்றியைப் பதிவு செய்த மும்பை அணி, முதல் அணியாக பிளே ஆஃப்பிற்கு தகுதி பெற்றது.

Views: - 36

0

0