பிளே ஆப் தகுதியை இழந்த மும்பை அணி: 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை..!
Author: kavin kumar9 October 2021, 12:44 am
ஹைதராபாத் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 193 ரன்கள் எடுத்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஐபிஎல் 2021 கடைசி லீக் ஆட்டங்கள் இன்று நடைபெற்றது. 55வது போட்டியில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இன்றைய போட்டியில் 173 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடலாம் என்ற கணக்கின் அடிப்படையில் மும்பை அணி விளையாடியது. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். ரோஹித் சர்மா 13 பந்துகளில் 18 ரன்களில் வெளியேறினார். இஷான் கிசன் தனது அதிரடியான ஆட்டத்தில் 32 பந்துகளில் 84 ரன்கள் அடித்து அசத்தினார். முதல் 8 ஓவரிலேயே மும்பை அணி 100 ரன்களை கடந்தது. ஹர்திக் பாண்டியா மற்றும் பொலார்ட் அடுத்தடுத்து அவுட்டாக பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார். 40 பந்துகளில் 82 ரன்கள் அடித்து எதிரணியை கலங்கடித்தார்.
13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் அவுட்டானார் சூரியகுமார். அதன்பின் களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு இழந்து 235 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. 236 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், அபிஷேக் சர்மா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து இருவரும் அதிரடியாக விளையாடினர்.சிறப்பாக விளையாடி வந்த ஜேசன் ராய் 6 பவுண்டரி அடித்து 34 ரன்கள் எடுத்து க்ருனால் பாண்டியாவிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
அடுத்த சில நிமிடங்களில் அபிஷேக் சர்மா 33 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து இறங்கிய முகமது நபி 3, அப்துல் சமத் 2 ரன் எடுத்து அடுத்தது விக்கெட்டை இழந்தனர்.பின்னர் களம் கண்ட மணீஷ் பாண்டே, பிரியம் கர்க் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். நிதானமாக விளையாடிய பிரியம் கர் 29 ரன் எடுத்த போது ஹர்திக் பாண்டியாவிடம் கேட்சை கொடுத்தார். சிறப்பாக விளையாடிய வந்த மணீஷ் பாண்டே அரைசதம் விளாசி 69 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.இறுதியாக ஹைதராபாத் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 193 ரன்கள் எடுத்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இப்போட்டியில் மும்பை வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்று 5-வது இடத்த்திற்கு வந்து பிளே ஆப் தகுதியை இழந்தது.
0
0