கொலை வழக்கில் சிக்கிய மல்யுத்த வீரர் சுசில்குமார் தலைமறைவு : துப்புகொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம்..!!

18 May 2021, 5:02 pm
sushil kumar - updatenews360
Quick Share

சக மல்யுத்த வீரரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் இந்திய மல்யுத்த வீரர் சுசில்குமார் குறித்து தகவல் கொடுத்தால் ரூ. 1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர்.

மல்யுத்த வீரர் சாகர் ராணு தான்கட்டுக்கும், மற்றொரு மல்யுத்த வீரரான சுசில்குமாருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. அண்மையில் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில், சுசில்குமார் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியதில், சாகர் தன்கட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, போலீசார் கொலைவழக்கு பதிவு செய்து மல்யுத்த வீரர் சுசில் குமாரைத் தேடி வருகின்றனர். அரியானா, சத்தீஸ்கர் என இரு மாநிலங்களிலும் கடந்த இருவாரங்களாக அவரை தேடியும் போலீசாரின் பிடியில் சிக்கவில்லை.

இந்த நிலையில், மல்யுத்த வீரர் சுசில் குமார் இருப்பிடம் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.1 லட்சமும், மற்றொரு நபரான அஜய் குறித்துத் தகவல் அளித்தால் ரூ.50 ஆயிரமும் பரிசு வழங்குவதாக டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர். இதனிடையே, டெல்லி ஐகோர்ட் மல்யுத்த வீரர் சுசில் குமாருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. சுசில்குமார் தரப்பில் இன்று முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 475

0

0