கோலிய முதல் போட்டியிலேயே சீக்கிரம் காலி பண்ணுங்க : இல்ல…. இங்கிலாந்தை எச்சரித்த முன்னாள் கேப்டன்..!!!

4 February 2021, 4:52 pm
nasser hussin - updatenews360
Quick Share

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்கிறது. முதல் டெஸ் போட்டி பிப்ரவரி 5 – 9 வரையிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13 – 17 வரை சென்னையில் நடக்கிறது. தொடர்ந்து அஹமதாபத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகள் பிப்ரவரி 24 – 28 மற்றும் மார் 4 – 8 வரையும் நடக்கவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில், இரு அணி வீரர்களும் சென்னையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இங்கிலாந்து தொடரில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியின் கேப்டன் கோலி இருப்பதாக முன்னாள் இங்., கேப்டன் நாசர் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறியதாவது :- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரகானே, தனது அமைதியான குணத்தினால் சாதித்து விட்டார். இது கோலிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். எனவே, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. சென்னையில் நடக்கும் போட்டிகளில் இந்தியா ஒருவேளை தோல்வியை தழுவினால், இந்தத் தொடர் முழுவதும் அவருக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, முதல் போட்டியில் இருந்தே அவர் சிறப்பாக ஆட வேண்டும். இது இங்கிலாந்திற்கு ஆபத்தாகி விடும், எனக் கூறினார்.

Views: - 0

0

0

1 thought on “கோலிய முதல் போட்டியிலேயே சீக்கிரம் காலி பண்ணுங்க : இல்ல…. இங்கிலாந்தை எச்சரித்த முன்னாள் கேப்டன்..!!!

Comments are closed.