அடடே.!! கங்குலிக்கும்… கான்வேவுக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா.. லார்ட்ஸில் அறிமுகப் போட்டியில் சதமடித்த முதல் நியூசி., வீரர்!!

3 June 2021, 1:00 pm
lords century - updatenews360
Quick Share

லார்ட்ஸில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான அறிமுக போட்டியில் நியூசிலாந்து வீரர் கான்வே சதம் விளாசியுள்ளார்.

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை செய்து வருகிறது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி சார்பில் அறிமுகமான கான்வே, லார்ட்சில் தனது முதல் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தியுள்ளார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 86 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்துள்ளது. கான்வே 136 ரன்களுடனும், ஹென்றி நிகோல்ஸ் 46 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

அதேபோல, 161 வது டெஸ்டில் விளையாடும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன், அதிக டெஸ்டுகளில் விளையாடிய சக நாட்டு வீரர் குக்கின் சாதனையை சமன் செய்துள்ளார்.

இதனிடையே, தென்னாப்ரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட கான்வே, நியூசிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். இவருக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலிக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

அதாவது, கங்குலியைப் போன்றே கான்வேவும் லார்ட்சில் தனது அறிமுக டெஸ்டில் சதம் அடித்துள்ளதாகவும், கங்குலியை போலவே இடது கை பேட்டிங், வலது கையில் பந்து வீசும் பழக்கம் கொண்டவராகவும் இருப்பதாக குறிப்பிட்டு வருகின்றனர். மேலும், இருவரும் ஜுலை 8ம் தேதி பிறந்திருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Views: - 409

0

0

Leave a Reply