தோனியுடன் எந்த மோதலும் இல்லை… மஞ்சள் ஜெர்சியுடன் மீண்டும் என்னை பார்க்கலாம் : குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ரெய்னா…!

2 September 2020, 4:46 pm
Quick Share

13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. இதற்காக, அனைத்து அணிகளும் கொரோனா வழிகாட்டு முறைகளுடன் ஆயத்தமாகி வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி மற்றும் ரெய்னா அறிவித்ததை தொடர்ந்து, இந்தத் தொடரில் சென்னை அணியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

யாரும் எதிர்பாராத நிலையில் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி, இந்தியா திரும்பினார் சென்னை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரெய்னா. இதனால், ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

தனது மாமா குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாமா உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவத்தினால்தான் அவர் ஐபிஎல்லை விட்டு விலகி வந்தது தெரிய வந்தது. ஆனால், அதே சமயம், அறை ஒதுக்கியது பிடிக்காததால் இந்த முடிவை அவர் எடுத்ததாக சென்னை அணி தரப்பில் கூறப்பட்டது.

இதனால், இனி சென்னை அணியில் ரெய்னாவின் பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஒரு கருத்து உலா வந்தது.

இந்த நிலையில், மஞ்சள் ஜெர்சியுடன் மீண்டும் என்னை பார்க்கலாம் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஆன்லைன் கிரிக்கெட் பக்கத்திற்கு அளித்த பேட்டியில், “சென்னை அணியின் உரிமையாளரான சீனிவாசன் என்னுடைய தந்தை போன்றவர். அவரும் என்னை அவரது இளைய மகனைப் போலத்தான் என்னை நடத்துவார். இந்தியா திரும்பியதற்கான காரணம் அவருக்கு தெரியாது. இப்போது, அவருக்கு அதனை தெரிவித்து விட்டேன். அவரும் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

அணி நிர்வாகத்துடனும், கேப்டன் தோனியுடனும் எந்விதமான மோதலும் இல்லை. மீண்டும் சென்னை அணியில் என்னை பார்க்கலாம், எனக் குறிப்பிட்டார்.

Views: - 0

0

0