மஞ்சளில் பச்சைக்கொடி தொடரும் : தோனியின் முடிவுக்கு ரசிகர்கள் வரவேற்பு!!

1 November 2020, 5:11 pm
Dhoni - Updatenews360
Quick Share

ஐபிஎல் போட்டியில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டின் ஐபிஎல் சீசன் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் பேராதரவு பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சொதப்பல் ஆட்டத்தினால் முதன்முறையாக பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கிறது.

இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் பிளே ஆப் சுற்றுக்கு சென்ற பெருமையை பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தற்போது மூத்த வீரர்களின் சொதப்பலால்தான் காரணம் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கேப்டன் தோனி இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார் என்ற வதந்தியும், ஒரு வித எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. இதற்கு ஏதுவாக தோனியிடம், கையெழுத்திட்ட ஜெர்சியை பெற்றுச் சென்றனர்.

இதனால் தோனி இந்த தொடரில் இருந்து ஐபிஎல்லுக்கு முட்டுக்கட்டை போட்டுவிடுவாரோ என ரசிகர்கள் மத்தியிலும், கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் இன்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய சிஎஸ்கே அணி கேப்டன் தோனி டாஸ் வென்றார். அப்போது அவரிடம் இது ஐபிஎல்லின் கடைசி போட்டியாக இருக்குமா என கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பதிலளித்த தோனி நிச்சயமாக இல்லை என பதிலளித்தார்.

இதனால் ரசிகர்கள் குழப்பத்திற்கு முடிவு கிடைத்துவிட்டது. தோனியின் பதிலுக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து சமூக வலைதளங்களை தெறித்துவிட்டு வருகின்றனர். எப்படியோ தோனியின் ஹேட்டர்ஸ்களுக்கு இந்த செய்தி வயிற்றில் புளியை கரைத்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Views: - 22

0

0

1 thought on “மஞ்சளில் பச்சைக்கொடி தொடரும் : தோனியின் முடிவுக்கு ரசிகர்கள் வரவேற்பு!!

Comments are closed.