‘நம்பர்- 1’இடத்தில் 310 வாரங்கள்… பெடரரின் சாதனையைச் சமன் செய்த ஜோகோவிச்!

1 March 2021, 10:28 pm
Quick Share

ஆண்களுக்கான டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ‘நம்பர் -1’இடத்தில் 310 வாரங்கள் இருந்து சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரின் சாதனையை செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.

கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் ஒன்பதாவது முறையாகப் பட்டம் வென்று சாதித்தார். இந்நிலையில் இவர் 310 வாரங்கள் நம்பர் 1 இடத்திலிருந்து பெடரரின் சாதனையைச் சமன் செய்துள்ளார். இந்நிலையில் அடுத்த வாரம் பெடரரின் சாதனையை ஜோகோவிச் தகர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பெயினின் ரஃபேல் நடால் இடம் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 2020 ஆம் ஆண்டு நம்பர் -1 இடத்தைப் பிடித்தார் செர்பியாவின் ஜோகோவிச்.

இதன் மூலம் தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக நம்பர் 1 இடத்துடன் முடித்து அசத்தினார் ஜோகோவிச். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 2014 ஆம் ஆண்டு முதல் நவம்பர் மாதம் 2016ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 122 வாரங்கள் நம்பர் 1 இடத்தில் நீடித்து வந்தார் ஜோகோவிச். தொடர்ச்சியாக அதிக வாரங்கள் நம்பர் 1 இடத்தை தக்க வைத்து வீரர்கள் பட்டியலில் பெடரர் முன்னிலையில் உள்ளார். இவர் 237 வாரங்கள் ஏடிபி தரவரிசைப் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் நீடித்த சாதனையைத் தன்வசம் வைத்திருந்தார்.

மார்ச் 1ம் தேதியின் படி ஏடிபி தரவரிசைப்பட்டியல் டாப்-10 வீரர்கள்:

  1. நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 12030 புள்ளிகள்
  2. ரபெல் நடால் (ஸ்பெயின்) 9850
  3. டேனில் மெட்விடேவ் (ரஷ்யா) 9735
  4. டாமினிக் தையிம் (ஆஸ்திரியா) 9125
  5. ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6630
  6. ஸ்டெபானஸ் ஸ்டிட்பஸ் (கிரீன்லாந்து) 6595
  7. அலெக்சாண்டர் ஜிவர்வெவ் (ஜெர்மனி) 5615
  8. அன்ரே ருப்லெவ் (ரஷ்யா) 4609
  9. திகோ சுவார்ட்மேன் (அர்ஜெண்டினா) 3480
  10. மாட்டியோ பெர்ரெடினி (இத்தாலி) 3480

Views: - 8

0

0