தரவரிசைப் பட்டியலில் அசைக்க முடியாத கோலி..! மீண்டும் டாப் 10-ல் நுழைந்தார் பேர்ஸ்டோ..!

17 September 2020, 5:56 pm
Virat_bairstow - updatenews360
Quick Share

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நேற்று முடிவடைந்தது. இதில், 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வென்றது.

இந்த நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டிக்கான வீரர்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் விராட் கோலி 871 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ரோகித் சர்மா வது இடத்திலும், 3வது இடத்தில் பாபர் ஆசம், 4வது இடத்தில் ராஸ் டெய்லர், 5வது இடத்தில் டுபிளசிஸ் ஆகியோர் உள்ளனர். நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சன் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்கள் பின்ச் மற்றும் வார்னர் முறையே 7,8 ஆகிய இடங்களில் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்க வீரர் டீ காக் 9-வது இடத்திலும் இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ 10-வது இடத்திலும் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் இந்த முன்னேற்றத்தை அவர் கண்டுள்ளார். இதற்கு முன்பாக 9வது இடத்தில் இருந்ததே சிறந்த தரநிலையாகும். அதேபோல, ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு காரணமான மேக்ஸ்வெல், 26வது இடத்திற்கும், காரே 28வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.

பவுலர்களின் தரவரிசைப் பட்டியலில் நியூசிலாந்தின் போல்ட் முதலிடத்திலும், இந்தியாவின் பும்ரா 2வது இடத்திலும் நீடிக்கின்றனர். இங்கிலாந்தின் வோக்ஸ் 3 இடங்கள் முன்னேறி, 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஆல்ரவுண்டர் தரவரிசையில் சக வீரர் பென் ஸ்டோக்ஸை பின்னுக்கு தள்ளி வோக்ஸ் 2வது இடத்தை பிடித்துள்ளார். ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி முதலிடத்தில் உள்ளார்.

Views: - 8

0

0