பாக்., வீரருக்கு மீண்டும் கொரோனா : ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு..?

27 June 2020, 2:31 pm
Quick Share

கொரோனா பரவலுக்கு மத்தியில் சர்வதேச கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற இருக்கிறது. இதில், இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோத இருக்கின்றன. இந்தத் தொடரை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து தலா 3 டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் விளையாட இருக்கிறது.

இந்தத் தொடருக்காக, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ், வகாப் ரியாஸ், பஹர் ஜமான், ஷதாப் கான், ஹைதர் அலி, ஹாரிஸ் ரவூப் உள்பட 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தனியார் மருத்துவனையில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளதாக ஹபீஸ் தெரிவித்துள்ள நிலையில், மீண்டும் பரிசோதனை செய்ததில் பாசிட்டிவ் முடிவு வந்துள்ளது.

இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கொரோனா பரிசோதனையில் குளறுபடி செய்வதாக வீரர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதைத் தொடர்ந்து, அவருக்கு மறுபடியும் செய்யப்பட்ட பரிசோதனையில் பாசிட்டிவ் வந்துள்ளது.
இதனால், தனிமையில் இருக்காத அவர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிகிறது.