பாகிஸ்தான் கால்பந்து அணிக்கு தடைவிதித்த பிபா!

7 April 2021, 7:57 pm
Quick Share

பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பை பிபா தடை செய்துள்ளது. மூன்றாவது நபர் தலையீடு காரணமாக இந்த நடவடிக்கையை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா எடுத்துள்ளது.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா இன்று பாகிஸ்தான் கூட்டமைப்பிற்கு உடனடியாக தடைவிதித்துள்ளது. மூன்றாவது நபர் தலையீடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா தெரிவித்துள்ளது. மூன்றாவது நபர் தலையீடு என்பது பிபாவின் வழிகாட்டு முறைகளின் படி கடுமையான குற்றமாகும்.

இந்தத் தடை தொடர்பாக பிபா இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்மையில் லாகூரில் உள்ள பிஎப்எப் தலைமையகத்தை சட்டவிரோத குழு கையகப்படுத்தியுள்ளனர். இது மோசமான நிலைமையை உருவாக்கியுள்ளது. பிபாவால் நியமிக்கப்பட்ட ஹாரூன் மாலிக் தலைமையிலான பணிக் குழுவை அகற்ற சில நபர்கள் முயற்சி செய்து வருகின்றனர். பிஎப்எப் தலைமையை சையத் அஷ்பக் உசேன் ஷாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் முயற்சி செய்து வருகின்றனர். ” என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மார்ச் 27ம் தேதி பிஎப்எப் முன்னாள் தலைவர் சையத் அஷ்பக் உசேன் ஷா மற்றும் அவரது குழுவினரால் பிஎப்எப் அலுவலகம் தாக்கப்பட்டது. உள்ளே இருந்தவர்கள் பிணைக் கைதிகளாக்கப்பட்டனர். விவகாரத்தை கையில் எடுத்த பிபா, இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன் எச்சரிக்கை கடிதம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Views: - 0

0

0

Leave a Reply