பாகிஸ்தானை விட ஐபிஎல் முக்கியமா…? பாக். முன்னாள் கேப்டன் அப்ரிடி கேள்வி..

8 April 2021, 5:27 pm
IPL - afridi - updatenews360
Quick Share

பாகிஸ்தானை விட ஐபிஎல் கிரிக்கெட் போட்டி முக்கியமானதாக மாறிவிட்டதா என்று பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் முடிவடைந்தது. இந்தத் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தத் தொடரின் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. ஆனால், அதற்கு முன்பாகவே, ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக, குயின்டன் டீ காக், ரபாடா, ஆன்ரிச் நார்ஜே, கிறிஸ் மோரிஸ் ஆகியோரை இந்தியாவிற்கு செல்ல தென்னாப்ரிக்க கிரிக்கெட் வாரியம் அனுமதியளித்தது.

இந்த நிலையில், தென்னாப்ரிக்க கிரிக்கெட் வாரியத்தின் செயலை விமர்சித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி, பாகிஸ்தான் அணியைவிட இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் முக்கியமானதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், “பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரின் போதே, முக்கிய வீரர்களை ஐபிஎல் தொடருக்காக தென்னாப்ரிக்க கிரிக்கெட் வாரியம் அனுப்பி வைத்திருப்பது வியப்பாக இருக்கிறது. ஐபிஎல் போன்ற டி20 லீக் போட்டிகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இது நல்லதல்ல, இதை மறு ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியம்,” எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 3

0

0

Leave a Reply