டம்மியாக்கப்பட்ட சர்பிராஸ் அகமது : பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்..!

13 May 2020, 6:16 pm
sarfraz ahamed 1- updatenews360
Quick Share

பாகிஸ்தான் கிரிக்கெட் ஒரு நாள் அணிக்கு புதிய கேப்டனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.

நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியை தழுவியது. அதிலும், எதிரி அணியாக கருதப்படும் நமது இந்திய அணியிடமும் பாகிஸ்தான் மூக்குடைத்துக் கொண்டது. இதனால், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது மீது அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு அதிருப்தியை ஏற்பட்டது.

இதையடுத்து, பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.

இதனிடையே, டி20 அணியின் கேப்டான நியமிக்கப்பட்ட பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணி, வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு எதிரான தொடர்களை கைப்பற்றியது.

இந்த நிலையில், பாகிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, டெஸ்ட் அணியின் கேப்டனாக அசார் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சர்பிராஸ் அகமது சாதாரண வீரராக மட்டுமே அணியில் விளையாட இருக்கிறார்.

Leave a Reply