ஷதாப் கானுக்கு மாற்றாக களமிறங்கிய ஜாகித் முகமது… டி20 அணியில் இடம்பிடித்த பஹர் ஜமான்!

7 April 2021, 9:07 pm
Quick Share

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது காயம் காரணமாக வெளியேறிய பாகிஸ்தான் வீரர் ஷதாப் கானுக்கு பதிலாக ஜாகித் முகமது மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் இரண்டு போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்றுள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று நடக்கிறது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது காயம் காரணமாக வெளியேறிய பாகிஸ்தான் வீரர் ஷதாப் கானுக்கு பதிலாக ஜாகித் முகமது மாற்று வீரராக

இந்த காயம் காரணமாக ஷதாப் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் மட்டுமில்லாமல், அடுத்து வரவுள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் பஹர் ஜமான் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 193 ரன்கள் அடித்தார்.

இருந்தாலும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தற்போது இவர் தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 அணியிலும் பஹர் ஜமான் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் பஹர் ஜமான் சதம் விளாசி அசத்தினார். இந்நிலையில் ஜாகித் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்கான அணியிலும், பஹர் ஜமான் ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலும் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகத்தின் வேண்டுகோளின் படி இந்த மாற்றங்களுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஒப்புதல் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் வரும் ஏப்ரல் மத்திய வாரத்தில் செல்கின்றனர்.

Views: - 0

0

0

Leave a Reply