பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் குவித்த வீரர்கள் : பரிசுத்தொகை அறிவித்த ஹரியானா அரசு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 September 2021, 10:49 am
Paralympic Prize- Updatenews360
Quick Share

பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு ஹரியானா அரசு பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டோக்கியோ பாராலிம்பிக்கில் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நர்வாலுக்கு தங்க பதக்கமும், சிங்ராஜுக்கு வெள்ளி பதக்கமும் கிடைத்துள்ளது.

இந்த துப்பாக்கிசூடுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ள மணீஷ் நர்வால் 218.2 புள்ளிகளுடன் பாராலிம்பிக்கில் படைத்துள்ளார். மேலும், ஏற்கனவே 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் சிங்ராஜ் வெண்கலம் வென்ற நிலையில், தற்போது வெள்ளி பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற மணீஷ் நர்வாலுக்கு ரூ.6 கோடியும், வெள்ளி வென்ற சிங்ராஜ்-க்கு ரூ.4 கோடியும் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று ஹரியானா அரசு அறிவித்துள்ளது.

Views: - 529

0

0