டோக்கியோ பாராலிம்பிக்… மாரியப்பன் விலகல்…? தமிழக ரசிகர்கள் அதிர்ச்சி..!!!

Author: Babu Lakshmanan
24 August 2021, 11:31 am
Quick Share

டோக்கியோ பாராலிம்பிக்‌ போட்டியின்‌ துவக்க விழாவில்‌ தமிழக ‌ வீரர்‌ மாரியப்பன்‌ தங்கவேலு பங்கேற்கமாட்டார்‌ எனத்‌ தகவல்‌ வெளியாகியுள்ளது.

டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டி இன்று தொடங்குகிறது. இதன் தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. இதில் அணிவகுக்கும் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,டோக்கியோ பாராலிம்பிக்‌ போட்டியின்‌ துவக்க விழாவில்‌ தமிழக ‌ வீரர்‌ மாரியப்பன்‌ தங்கவேலு பங்கேற்கமாட்டார்‌ எனத்‌ தகவல்‌ வெளியாகியுள்ளது.

கரோனா உறுதி செய்யப்பட்ட சர்வதேச பயணியின்‌ தொடர்பில்‌ மாரியப்பன்‌ இருந்துள்ளார்‌. மேலும்‌, ஒலிம்பிக்‌ கிராமத்தில்‌ பரிசோதனை செய்யப்பட்டதில்‌
மாரியப்பனுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும்‌, இன்று நடைபெறவுள்ள துவக்க விழாவில்‌ பங்கேற்க வேண்டாம்‌ என
ஒலிம்பிக்‌ ஒருங்கிணைப்பு குழு அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து, துவக்க விழாவில்‌ இந்திய கொடியை ஏந்தும்‌ மாற்று வீரராக டேக்‌ சந்த்‌
அறிவிக்கப்பட்டுள்ளார்‌.

Views: - 400

0

0