பாராலிம்பிக் துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் : வெள்ளியையும் தட்டித்தூக்கி அபாரம்..!!!

Author: Babu Lakshmanan
4 September 2021, 9:42 am
gun shoot - updatenews360
Quick Share

பாராலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளியை கைப்பற்றி அசத்தியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று துப்பாக்கிச்சுடுதல் போட்டிக்கான இறுதிச்சுற்று நடந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய வீரர்கள் மனிஷ் அகர்வால் மற்றும் சிங்கராஜும் கலந்து கொண்டனர்.

பரபரப்பாக நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளியை கைப்பற்றி அசத்தினர்.

50 மீட்டர் P4 MIXED பிஸ்டல் SH1 பிரிவில் இந்திய வீரர் மனிஷ் நர்வால் தங்கம் வென்று அசத்தல். இதே பிரிவில் இந்திய வீரர் சிங்ராஜ் வெள்ளி பதக்கம் வென்றார். இன்று ஒரே நாளில் 2 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. ஒட்டு மொத்தமாக, 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலத்துடன் 15 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில், இந்தியா 34வது இடத்தில் உள்ளது.

Views: - 378

0

0