மீண்டும் துவங்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர்: பாக் போர்டு அறிவிப்பு!

Author: Udayaraman
11 April 2021, 7:00 pm
Quick Share

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் வரும் ஜூன் 1ம் தேதி முதல் மீண்டும் துவங்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) தொடரில் பங்கேற்ற 6 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்த தொடர் உடனடியாக நிறுத்தப்பட்டதோடு வரும் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. தொடர் வரும் ஜூன் 1ம் தேதி முதல் மீண்டும் துவங்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்கள் வரும் மே 22 முதல் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 20 முதல் மார்ச் 3ம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த தொடரில் 14 லீக் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நடத்தப்பட்ட கூட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீண்டும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை நடத்த முடிவு செய்துள்ளது. மேலும் வீரர்களின் பயோ பாதுகாப்பு முறைக்கு 2 பேர் கொண்ட குழுவையும் நியமித்து பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படுகிறதா என தீவிரமாக கன்காணிக்கவும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக இந்த தொடரில் கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடிய அமீர் யாமின், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நிறுத்தப்பட்ட போது, இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய தொடரில் ரசிகர்களின் அனுமதிப்பட்ட புகைப்படத்தை கிரிக்கெட் இணையதளம் வெளியிட்ட டிவிட்டர் பதிவிற்குப் அமீர் யாமீன் அளித்திருந்த பதிலில் “கொரோனா எங்கே?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு இந்திய ரசிகர்கள் அவருக்கு நோஸ்கட் அளிக்கும் விதத்தில் பதில் அளித்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடக்கவுள்ளது.

Views: - 51

0

0