தன்னையே அவர் கேள்வி கேட்டிருக்கலாம்.. ஆனா இப்பா பதில் சொல்ல கேள்வியே இல்ல: கெவின் பீட்டர்சன்!

2 May 2021, 10:14 pm
Quick Share

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் 99 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மாயங்க் அகர்வாலை முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டியுள்ளார்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டெல்லி அணியை எதிர்கொள்கிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ராகுல் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் மாயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இதில் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

மாயங்க் மிரட்டல்
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ராகுல் இல்லாத நிலையில் கேப்டன் பொறுப்பை ஏற்ற, மாயங்க் அகர்வால் 58 பந்தில் 8 பவுண்டரி 4 சிக்சர் என மொத்தமாக 99 ரன்கள் அடித்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார். மேலும் ஐபிஎல் அரங்கில் தனது 9வது அரைசதத்தை பதிவு செய்தார் மாயங்க். இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 166 ரன்கள் அடித்தது.

இரண்டு வழிகள்
இந்நிலையில் கேப்டன் பொறுப்பு மாயங்க் அகவாலை பல வகையில் மாற்றிவிட்டதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டியுள்ளார். இதுகுறித்து பீட்டர்சன் கூறுகையில், “கேப்டன் பொறுப்பு என்பது உங்களை இரு வழிகளில் மாற்றிவிடும். உங்கள் மீது வைக்கப்படும் அந்த சுமையானது நீங்கள் எப்படி உங்கள் அணியை வழிநடத்துகிறீர்கள் என சோதிக்கும். அணி வீரர்கள் மற்றும் அணியைப்பற்றி உங்களை அதிக கவலையை ஏற்படுத்தி நெருக்கடியை ஏற்படுத்தும்.

கேள்வியே இல்லை
கடந்த போட்டியில் கூட மாயங்க் விளையாடவில்லை. அதே நேரம் கேப்டனாக இருந்த ராகுல் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதனால் ஒரு சில நேரம் உங்களையே நீங்கள் கேள்வி கேட்கும் நிலை ஏற்படலாம். இந்த போட்டிக்கு முன்பாக மாயங்க் அகர்வாலும் தன்னையே கேள்வி கேட்டிருக்கலாம். ஆனால் தற்போது அவர் பதில் அளிக்க கேள்விகளே இல்லை என்பதே உண்மை” என்றார்.

Views: - 123

0

0

Leave a Reply