தள்ளிப்போகும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்: எப்போ நடக்குது தெரியுமா?

25 January 2021, 9:51 pm
Quick Share

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஃபைனல் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுண்சில் (ஐசிசி) சார்பில் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் ஃபைனல் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்த ஃபைனல் போட்டி தற்போது வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக வரும் ஜூன் 10 – 14 தேதிகளில் இந்த போட்டி நடக்கயிருந்தது. தற்போது இது ஜூன் 18- 22 வரை நடக்கவுள்ளது. ஜூன் 23ம் தேதி ரிசர்வ் நாளாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், வீரர்களை இரு வாரங்கள் தனிமைப்படுத்தி அதற்கு பின் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதற்கான முன்னெச்சரிக்கையாகவும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

இந்திய அணி ஐந்து தொடர்களில் பங்கேற்று 430 புள்ளிகளுடனும், நியூசிலாந்து அணி ஐந்து தொடர்களில் பங்கேற்று 420 புள்ளிகளும் பெற்றுள்ளது. இதற்கிடையில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக மேலும் ஒரு டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதே போல ஆஸ்திரேலிய அணி தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரின் ஃபைனலுக்கு முன்னேற ஆஸ்திரேலிய அணி இந்த தொடரை கைப்பற்ற வேண்டிய நிலையில் உள்ளது.

கடந்த ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் புள்ளி ரேட்டிங் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக தற்போது அணிகல் பெறும் புள்ளிகளின் சதவீதம் அடிப்படையில் அணிகளின் வரிசை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதற்கிடையில் இந்தாண்டு ஜுன் மாதம் இங்கிலாந்து அணி, நம்பர்-1 டெஸ்ட் அணியான நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 8

0

0