பிஎஸ்ஜி அணியில் நெய்மருடன் புதிய கூட்டணி போடும் மெஸ்ஸி… சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
11 August 2021, 1:04 pm
neymar - messi - updatenews360
Quick Share

பார்சிலோனா அணியில் இருந்து விலகி பிஎஸ்ஜி அணியில் இணைந்த உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரரான மெஸ்ஸியின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அர்ஜென்டினாவில் ரோசாரியோ நகரில் பிறந்த லயோனல் மெஸ்ஸி, தனது நேர்த்தியான ஆட்ட முறையினால் தன்னுடைய 13வது வயதில் பார்சிலோனா அணிக்கு விளையாடும் வாய்ப்பை பெற்றார். பல்வேறு தொடர்களில் அந்த அணிக்கு வெற்றியை தேடித் தந்த அவர், கோல்டன் ஷு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்று உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

சிறு வயதில் இருந்தே பார்சிலோனாவுக்காக ஆடி வந்த அவர், அந்த கிளப்புடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்டார். இந்த நிலையில், அணியில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, மெஸ்ஸி பார்சிலோனாவில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தனது ஊதியத்தை 50 சதவீதமாக குறைக்கவும் தயார் என மெஸ்ஸி கூறிய போதும், அதனை அந்த கால்பந்து அணி நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த சூழலில், பார்சிலோனா அணியில் இருந்து மெஸ்ஸி கனத்த இதயத்துடன் விலகுவதாக அறிவித்தார். நேற்று முன்தினம் நடந்த பிரிவுபசார நிகழ்வில் அவர் கண்ணீரோடு பேசியபோது, தமது வாழ்வின் மிகக் கடினமான கட்டம் என்றும், புதிய அத்தியாயம் இனி தொடங்கும் எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறிய உலகின் முன்னணி கால்பந்து வீரர் மெஸ்ஸி, பிஎஸ்ஜி அணியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். சுமார் 2 ஆண்டுகளாக விளையாட அவர் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிஎஸ்ஜி அணியுடன் அவர் செய்த ஒப்பந்தத்தின் மூலம் மெஸ்ஸிக்கு ரூ.305 கோடி ஊதியம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 747

0

0