சதமடித்து பெங்களூரூவை ‘கதம்’ செய்த கே.எல் ராகுல் : பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

24 September 2020, 11:09 pm
Quick Share

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரூ அணியை எளிதில் வீழ்த்தியது பஞ்சாப் அணி.

டாஸ் வென்ற பெங்களூரூ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கே.எல். ராகுல் ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை தொடங்கினார். அவருக்கு சக அணி வீரர்கள் ஒத்துழைப்பு கொடுத்தனர். ஆட்டம் செல்ல செல்ல அதிரடி காட்டிய ராகுல், இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் முதல் சதத்தை பதிவு செய்தார். இதனால், பஞ்சாப் அணியின் ரன் கிடுகிடுவென அதிகரித்தது. கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காத ராகுல் 132 ரன்கள் குவிக்க, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில், 205 ரன்கள் சேர்த்தது.

இதைத்தொடர்ந்து, இமாலய இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரூ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. வெறும் 5 ரன்களுக்கு கேப்டன் கோலி உள்பட முக்கிய 3 வீரர்களின் விக்கெட்டை இழந்து தடுமாறியது. தொடர்ந்து வந்த வீரர்களும் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால், அந்த அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம், 97 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

Views: - 5

0

0