டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: த்ரில்லிங்கான பேட்மிண்டன் ஆட்டம்…அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து..!!

Author: Aarthi
30 July 2021, 3:37 pm
Quick Share

டோக்கியோ: பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனையை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள், கடந்த 23ம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது.

pv-sindhu-beats-japan-s-akane-yamaguchi

இதில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதன்தொடர்ச்சியாக பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 – 69), இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இந்நிலையில், மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் காலிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, ஜப்பானின் அகனே யமாகுச்சியை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் முதல் செட்டை சிந்து 21 – 13 என எளிதாக வெல்ல, இரண்டாவது செட்டை வெல்ல யமாகுச்சி கடும் சவாலாக இருந்தார்.

இருப்பினும் இறுதியில் 22 – 20 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் சிந்து வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். சிந்து, இந்த ஒலிம்பிக்கில் தான் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் நேர் செட்களில் வென்று அசத்திவருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 220

0

0